" alt="" aria-hidden="true" />
சீனாவில் கடந்த டிசம்பர் இறுதியில் இருந்து பரவி வரும் கொரோனா வைரஸ் தொடர்ந்து உயிர்ப்பலி வாங்கி வருகிறது. சீனா மட்டும் அல்லாது உலக நாடுகளையும் பீதிக்குள்ளாக்கிய கொரோனா வைரஸ் தென்கொரியா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகளில் பாதிப்பை ஏற்படுத்தியது.
கோவிட்-19 என பெயரிடப்பட்ட இந்த வைரசினால் நாள்தோறும் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையும், இறப்போரின் எண்ணிக்கையும் பல மடங்காக அதிகரித்துக் கொண்டே வருகிறது. நோய் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆயிரக்கணக்கான மருத்துவர்கள், செவிலியர்கள் தொடர்ந்து சிகிச்சை அளித்து வருகின்றனர்.
இந்நிலையில் பாகிஸ்தான் நாட்டு ராணுவத்தில் 3 லெப்டினன்ட் கர்னல், 2 கர்னல், 2 பிரிகேடியர் மற்றும் ஒரு மேஜர் ஜெனரல் உட்பட 8 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டிருப்பதாகத் தகவல் வெளியாகி உள்ளது. இதனை அந்த நாட்டு சுகாதாரத்துறை அமைச்சகம் தனது டுவிட்டரில் வெளியிட்டுள்ளது. இதன் மூலம் பாகிஸ்தானில் கொரோனா வைரஸ் பாதிப்புக்குள்ளானவர்கள் எண்ணிக்கை தற்போது 28 ஆக அதிகரித்துள்ளது.