மதுரை சோழமண்டலம் பைனான்ஸில் வாடிக்கையாளர்கள் அலைக்கழிப்பு

மதுரை  சோழமண்டலம்  பைனான்ஸில் வாடிக்கையாளர்கள்  அலைக்கழிப்பு


" alt="" aria-hidden="true" />


 கொரோனா தொற்று  காரணமாக  ஊரடங்கு உத்தரவால்  மக்கள் பெரிதும்  பாதிப்படைந்துள்ள   நிலையில்    சமீபத்தில் அரசு இது போன்ற  வாகனம் மட்டும் வீடு  சம்மந்தமான  இ எம் ஐ தொகையினை வங்கிகள் மற்றும்  தனியார் பைனான்ஸ் நிறுவனங்கள்  மூன்று மாதத்திற்கு  வட்டி வசூலிக்க கூடாது என   அறிவித்திருந்தது.  இதனை தனியார் கார்ப்பரேட் கம்பெனிகள்  அரசின் ஆணையை மதிக்காமல்  பொதுமக்களிடம் மாதத் தவணையை கட்டும்படி தினசரி  அவர்களை தொலைபேசி மூலமாக  EMI கட்டவில்லை என்றால் வட்டிகள் இரட்டிக்க படும் என்று  பயமுறுத்துவதாக  மதுரை மக்கள்  குமுறுகிறார்கள். 


 இதற்கு அரசாங்கம் சரியான நடவடிக்கை எடுக்குமா  இல்லையென்றால் கார்ப்பரேட் கம்பெனிகளுக்கு கைக்கூலியாக செயல்படுமா என கேள்வி எழுப்புகின்றனர்.   மதுரையில் அமைந்துள்ள சோழமண்டலம் பைனான்ஸ்ஸில் வாடிக்கையாளர்கள் வாகன வாங்கியதற்கான தவணை கட்ட சென்றபோது  அதற்குண்டான வட்டியையும்  செலுத்தவேண்டும் என அங்கிருந்த  பைனான்சியர் தெரிவித்திருக்கிறார்.  அரசு அறிவித்தும் எந்த ஒரு சலுகைகளும்  தமிழக மக்களுக்கு இந்த தவணை  மூலமாக எந்த பலனும் இல்லை  என்பதை புரிந்து  கொண்ட மக்கள்  இதற்கு  வட்டியை தெரிவிக்குமாறு கேட்டதற்கு  அதற்கு பைனான்ஸ் இலிருந்து கூறிய தகவல்  RBIல் இருந்து எங்களுக்கு  எவ்வளவு வட்டி என்பதை தெரிவித்த பிறகே நாங்கள் சொல்லமுடியும்  அதன் பின்னரே நீங்கள் வந்து பணத்தை கட்டலாம் என  அலட்சியமாக பதில் அளித்து இருக்கிறார்கள். மதுரை கரிசல்குளம் பகுதியை சேர்ந்த ஒருவர் வாகனத்திற்கான மாத தவணை ரூபாய் - 31 553/- கட்ட வேண்டும் இந்த தவணையை கட்ட சென்றால் RBI ல் இருந்து இதற்கான வட்டி தொகையினை சொன்ன பிறகே நாங்கள் உங்களுக்கு தகவல் கொடுப்போம். அப்பொழுது வந்து கட்டுங்கள் என பதில் அளித்துள்ளனர். 


 இதற்கு அரசு  இதுபோன்ற  நிறுவனங்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென   பொதுமக்கள் ஆதங்கத்துடன் தெரிவித்துள்ளன.