வேலூரில் கொரோனா நோய்க்கு சிகிச்சை அளித்து வந்த மருத்துவமனைக்கு சீல் - மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை..

வேலூரில் கொரோனா நோய்க்கு சிகிச்சை அளித்து வந்த மருத்துவமனைக்கு  சீல் - மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை


" alt="" aria-hidden="true" />


வேலூர் மாவட்டம், வேலூர் கொணவட்டத்தை சேர்ந்த பெண் ஒருவருக்கு 2 நாட்களுக்கு முன் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது. தற்போது அவர்  சிஎம்சி மருத்துவமனையில் கவலைக்கிடமான  நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். இன்று இப்பெண்ணிண் குடும்பத்தை சேர்ந்த 4 வயது பெண் குழந்தை உட்பட 3 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து முதலில் பாதிக்கப்பட்ட 52 வயது பெண்ணுக்கு ஆரம்பத்தில் சிகிச்சை பார்த்ததாகவும், இவரின் உடல் நிலை குறித்து மாவட்ட நிர்வாகத்திர்க்கு தகவல் தெரிய படுத்தாததாலும் வேலூர் கொணவட்டத்தில் செயல்பட்டு வந்த தனியார் மருத்துவமனை  (இந்திரா நர்சிங் Home) மாவட்ட ஆட்சியரின் உத்தரவின் பேரில்  வருவாய் துறையினர் சீல் வைத்தனர். மேலும் இக் கிளினிக்கில் பணியாற்றிய அனைவருக்கும் வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கொரோனா வைரஸ் தொற்று பரிசோதனை மேற்க்கொள்ளப்பட்டுள்ளது. மேலும் இவர்கள் அனைவரும் வீடுகளில் 14 நாள் தனிமை படுத்தி கண்காணிக்க உள்ளது. மாவட்ட நிர்வாகம். மேலும் காய்ச்சல், சளி, இரும்பல் என தனியார்  மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளை உடனடியாக மாவட்ட நிர்வாகத்தின் கவனத்திர்க்கு கொண்டு வர வேண்டும். 


அப்படி தகவல் தெரிவிக்காமல் கடைசி நேரத்தில்  அரசு மருத்துவமனைக்கு நோயாளிகளை அனுப்பும் வைக்கும்  தனியார் மருத்துவமனைகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம் எச்சரித்துள்ளார்...